பிரதான செய்திகள்விளையாட்டு

ஆசியக்கிண்ண D20 தொடரில் லசித் மலிங்க பதவி விலகல்!

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கா டி20 அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதனையடுத்து சகலதுறை வீரரான அஞ்சலோ மேத்யூஸ் உலகக்கிண்ண டி20 போட்டிக்கு தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசியக்கிண்ண டி20 தொடரில் காயம் காரணமாக ஒரு போட்டியில் மட்டுமே மலிங்கா விளையாடினார்.

இதனால் இலங்கை அணி இந்த தொடரில் மோசமாக தோல்வியடைந்து லீக் சுற்றிலேயே வெளியேறியது.

இந்நிலையில் காயம் காரணமாக தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக மலிங்கா நேற்று இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த தகவலை இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவர் மோகன் டி சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

மனிதர்களை பழிவாங்கும் அரசாங்கம் மஹிந்த

wpengine

முன்னால் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தவறு செய்யவில்லை பைஸல் காசிம் பா.உ

wpengine

ஐ.தே.க உள்ளுராட்சி தேர்தலில்! ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டி

wpengine