ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் பாடசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகள்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் பாடசாலைகளை திறப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போட்ட பின்னர் இந்த நடவடிக்கைகள் செயற்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான கோவிட் தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றிருந்தது. 

இதில் வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்று தடுப்பூசி போடப்படும், மேலும் இந்த திட்டம் நாளை நிறைவடையும்.

நாட்டில் 242,000 ஆசிரியர்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலானோருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares