அஹ்மதி- முஸ்லிம்களை கொல்லுமாறு கோரும் துண்டு பிரசுரங்கள் ‘பிரிட்டனில்

அஹ்மதி முஸ்லிம்களை கொல்லுமாறு அழைப்புவிடுக்கும் துண்டுபிரசுரங்களை லண்டனில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் கிடைக்கபெற்றுள்ளது.

இஸ்லாத்தின் ஒரு பிரிவான அஹ்மதியரை, தங்களின் மத நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர்களாகவே சில முஸ்லிம்கள் கருதுகின்றனர்.

கிளாஸ்கோவில், மதக் காரணங்களுக்காக கொல்லப்பட்டதாக நம்பப்படும் கடை உரிமையாளர் ஒருவரின் கொலையைத் தொடர்ந்து, பிரிட்டனிலும் அஹ்மதியருக்கு எதிரான போக்கு வளர்வதாக கவலைகள் உள்ளன.

சம்பந்தப்பட்ட பள்ளிவாசலில் காணப்பட்ட துண்டுபிரசுரங்கள், இதற்கு முன்னரும் கிடைத்துள்ளன. ஆனால், அதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று பள்ளிவாசலின் பொறுப்பாளர் மீண்டும் கூறியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares