பிரதான செய்திகள்

‘அஸ்வெசும’ திட்ட மேல்முறையீட்டுக்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவு!

‘அஸ்வெசும’ சமூக பாதுகாப்பு நலன்புரித் திட்டம் தொடர்பான மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (10) நிறைவடைகின்றது.

மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் இணையம் மூலமாகவும் நாடளாவிய ரீதியில் உள்ள பிரதேச செயலகங்களிலும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

இது தொடர்பில் இதுவரை 815,000 மேல்முறையீடுகளும் 11,000 ஆட்சேபனைகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

‘அஸ்வெசும’ திட்டம் தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் விசாரணைகளுக்கு, பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ‘1924’ என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு

wpengine

மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்

wpengine

ஏன் வெள்ள அனர்த்தம் ஞான­சார தேரர் தெரிவிக்கின்றார்.

wpengine