பிரதான செய்திகள்

அஸ்வெசும சமூக நலன்புரி திட்டத்தில் மாற்றமில்லை – கொடுப்பனவு விரைவில் வங்கியில் வைப்பிலிடப்படும்!

நாட்டு மக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அவசர அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளார்.

அதன்படி எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்கான பயனாளர்கள், வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அது குறித்து பிரதேச செயலகங்களுக்கு தெரியப்படுத்துமாறு  டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
 
மேலும் கூறுகையில், புதிய முறைமை நடைமுறையாகும் வரையில், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் நலன்புரி கொடுப்பனவு முறைமைகளில் மாற்றம் ஏற்படாது.

குறைந்த வருமானம் கொண்டோர், சிரேஷ்ட பிரஜைகள், சிறுநீரக நோயாளர்கள் உட்பட ஏனைய நோய் நிலைமைகளுக்கு உள்ளானவர்களுக்காக, தற்போது வழங்கப்படுகின்ற நலன்புரி கொடுப்பனவுகளில் மாற்றமில்லை என சுட்டிக்காட்டியுள்ளார். 

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவானது நேரடியாக வங்கிகளிலேயே வைப்புச் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இதேவேளை அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவி கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை இந்த வார இறுதிக்குள் ஆரம்பிக்குமாறும் அவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

அல் ஜசீரா ஊடகத்தில் மன்னர் சல்மான் கடவுள்! கட்டுரையாளர் பணி நீக்கம்

wpengine

“ஒற்றுமையான பயணத்துக்கு உறுதிபூணுவோம்’ முஹர்ரம் வாழ்த்துச் செய்தியில் ஹிஸ்புல்லாஹ்

wpengine

இலங்கை – இந்திய கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்

Editor