அஷ்ரப்பின் கால் தூசுக்குக் கூட ஹக்கீம் பெறுமதியற்றவரென கூறியவர் தான் இந்த ஹரீஸ்

(கல்முனை முபாரிஸ்)
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரான ஹரீஸ் பிரதியமைச்சராக பதவியுயர்வு பெற்ற பின்னர் ஹக்கீமின் நெருங்கிய விசுவாசியாக மாறிவிட்டார். ஹக்கீமை கடந்த காலங்களில் எவ்வளவு மோசமாக தூஷித்தாரோ அதே போன்று இப்போது ஹக்கீமை நேசிப்பது போல் பாசாங்கு காட்டுகிறார்.

மு கா வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர்அஹமட்டும் ஒரு பிரதித் தலைவராக இருந்த போதும் ஹரீஸைப்போல் ஹக்கீமுக்கு சட்டி பிடிப்பவரல்ல. தான் கீறிய கோட்டுக்குள்ளே ஹக்கீம் இருக்க வேண்டுமென்பது தான் அவரது அரசியல் தந்திரோபாயம். ஆனால் ஹரீஸ் ஒரு வாய்ச்சொல் வீரராக மட்டும் இருப்பதால் ஹக்கீமுக்கு காக்காய் பிடிப்பதன் மூலமே தனது கருமங்களை ஆற்றமுடியென நம்புகிறார்.
இத்தனைக்கும் சுமார் 15 வருட கால அரசியல் வாழ்வில் முஸ்லிம் சமூத்திற்காக குறிப்பாக தான் பிரநிதித்துவப்படுத்தும் அம்பாறை மக்களுக்காக ஹரீஸ் எதனையும் செய்யவில்லை.
அப்பாவி மக்களை பூச்சாண்டி காட்டிக் கொண்டே தனது அரசியல் பிழைப்பை நடத்துகிறார். குறைந்தது, தான் சார்ந்த பகுதியான சாய்ந்தமருதுக்குக்கூட பிரதேச சபையை பெற்றுக்கொடுப்பதில் வக்கில்லாத அரசியல்வாதியாக  விளங்குகிறார்.
சாய்ந்தமருதுக்கு தமது தலைவர் பிரதேச சபை பெற்றுத்தருவார் என்று சாய்ந்தமருது பள்ளிவாயல் மரைக்கார்மாரிடம் சத்தியம் பண்ணிக்கொடுத்தே கடந்த தேர்தலில் அந்த மக்களின் வாக்குகளை கவர்ந்தார்.
பிரதியமைச்சர் பதவி கிடைக்காத காலங்களில், “அஷ்ரப்பின் கால் தூசுக்குக்கூட ஹக்கீம் பெறுமதியற்றவர்” என கூறியவர்.  இதற்கான ஒலி நாடாக்கள் கூட  இன்னும் இருக்கின்றன. மு கா தலைமைப்பதவியிலிருந்து ஹக்கீமை அகற்றுவதில் முன்னின்று உழைத்தவர். அவருக்குப் பல துரோகங்களைச் செய்தவர். தனியார் தொலைக்காட்சியொன்றில் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மு கா தலைமையை படு பயங்கரமாக ஏசியவர். இவையெல்லாம் சரிவராத நிலையில் தலைவரின் கால்களில் விழுந்து சரணாகதியடைந்தவர். இவர் ஒரு சட்டத்தரணி. ஆனால் கோட்டு வாசற்படியையே இன்னும் மிதிக்காதவர்.
கல்முனையில் மெஸ்ரோ இயக்கத்தைத் தொடங்கி அப்பாவி இளைஞர்களை தம் பக்கம் இழுத்து மக்கள் எழுச்சியென்ற மாயையைக்காட்டி அரசியலுக்குள்  வந்தவர். மரத்தின் நிழல் இல்லாவிட்டால் இவர் ஒரு செல்லாக்காசே!!!
மு கா தலைமைக்குத் துரோகமிழைத்துவிட்டு ஒரு முறை வெற்றிலையில் போட்டியிட்டு மண் கவ்வியவர்.
இவருக்கு சொந்தப்புத்திக் கிடையாது, மகுடிக்கு ஆடும் பாம்பு போல ஆடுகவர்தான் இந்த ஹரீஸ். எனவே இந்தப் பலமுனை மாநாட்டின் பின்னராவது இவர் திருந்தி கல்முனை மக்களுக்கு உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டுமென அன்பாய் வேண்டுகின்றோம்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares