அழகு கலை நிலையங்கள், முடிவெட்டும் நிலையங்கள் திறக்க நடவடிக்கை

தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அழகு கலை நிலையங்கள், முடி வெட்டும் நிலையங்களை பாதுகாப்பு முறையின் கீழ் திறப்பதற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி அறிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசாங்கத்தினால் தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அழகு கலை நிலையங்களை மீள திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


அழகு கலை துறைக்கான சட்டத்திட்டங்களை முன்னெடுக்க வேறு எந்த துறையும் இல்லை என்பதனால் சுகாதார அமைச்சிற்கு மாத்திரமே அது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதற்கமைய தினசரி சேவையின் போது, சுகாதார அமைச்சின் ஆலோசனையின்படி, முடி வெட்டுதல் உள்ளிட்ட மிக அத்தியாவசிய சேவைகளை மட்டுமே மேற்கொள்வதற்கு வழங்க சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது
சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப போதுமான இடவசதியுடன் பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அத்துடன் அழகு நிலையம் சேவைகளை முறையாக பராமரிப்பது குறித்த அறிவுறுத்தல்களுடன் வழிகாட்டியை சமர்ப்பிக்க சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares