அலிபாபா நிறுவனரும் சீனாவின் முன்னணி பணக்காரருமான ஜேக் மா எங்கு சென்றார்

அலிபாபா நிறுவனரும் சீனாவின் முன்னணி பணக்காரருமான ஜேக் மா கடந்த இரண்டு மாதங்களாக எங்கு சென்றார் என்ற தகவல் தெரியவரவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன.

சீன அரசைக் கடுமையாக விமர்சித்து வந்த ஜேக் மா காணாமல் போயிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

சீனத்தை சேர்ந்த முன்னணி ஒன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபாவை நிறுவியவர் ஜேக் மா. சீனத்தின் மின் வணிகம் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையை அலிபாபா நிறுவனத்தின் மூலம் தனதாக்கிக்கொண்டவர் ஜேக் மா.

சீனாவில் வெற்றிக்கொ நாட்டிய அலிபாபா நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி வருகிறது. இந்த நிலையில், சீன அரசிற்கும் ஜேக் மா-விற்கும் இடையே மோதல் போக்கு உருவானது. அலிபாபா நிறுவன வளர்ச்சியைத் தடுக்கும் வகையில், சில கோட்பாடுகளை சீன அரசு வகுப்பதாகவும் பழமைவாதத்தை சீன அரசு கைவிட வேண்டும் என்றும் ஜேக் மா கடந்த ஒக்டோபர் மாதம் வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார்.

இந்த விமர்சனத்தைத் தொடர்ந்து, கடந்த 2 மாதங்களாக ஜேக் மா பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஜேக் மா வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை எந்த தகவலும் உறுதி செய்யப்படவில்லை.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares