இஸ்லாமிய விவாகம், விவாகரத்துச் சட்டம் தொடர்பில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் தெரிவித்த கூற்றுக்களை வாபஸ் பெற வேண்டும் அத்துடன் அவர் அந்த நிலைப்பாட்டிலிருந்து மாற வேண்டும் எனவும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் சபையில் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தில் கல்வியமைச்சின் மீதான வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் சபையில் மேலும் தெரிவிக்கையில்;
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எனது நல்ல நண்பர். அவர் அண்மையில் எமது மார்க்கத்துக்குள் மூக்கை நுழைத்து விட்டார். அவர் அதைத் தெரிந்து செய்தாரா? அல்லது விளம்பரத்திற்காக செய்தாரா? என்பது புரியவில்லை. அவரை நாங்கள் தண்டிக்க முடியாது. என்றாலும் அவருக்கு எமது மார்க்கத்தைப் பற்றி சொல்ல வேண்டிய தேவை உள்ளது.
நாட்டில் ஒட்டுமொத்த மக்களுக்கும் நாம் கூறிக் கொள்ளும் விடயம் என்னவென்றால், நாங்கள் புனித இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுள்ளோம். எங்களது மார்க்கம் பூரணப்படுத்தப்பட்டு விட்டது. அதிலே எவரும் மூக்கை நுழைத்து மாற்றங்களை செய்ய முடியாது.
ஒரு மனிதனுடைய பிறப்பிலிருந்து, மரணிக்கும் வரைக்கும் உள்ள விடயங்கள் எங்கள் மார்க்கத்தில் கூறப்பட்டுவிட்டன. ஒரு மனிதனின் பிறப்பில் இருந்து மரணித்து நல்லடக்கம் செய்யும் வரைக்குமான விடயத்தை எமது புனித அல் குர் ஆனும் முஹம்மது நபி (ஸல் ) அவர்களும் எங்களுக்கு போதித்துள்ளனர் .
அதில் ஆணாக இருந்தால் எவ்வாறு அல்லது பெண்ணாக இருந்தால் எவ்வாறு வாழ வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ம அஷ்ரப் தாஹிர் அதனது கண்டனத்தை பாராளுமன்றத்தில் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
☀️ வன்னிநியூஸ் வட்ஸ்ப் குழுவில் இணைய: https://chat.whatsapp.com/ECH9aFFlKIJB0htsdAdJyg