பிரதான செய்திகள்

அரிப்பு அ.த.க பாடசாலைக்கு உதவித்திட்டம்.

மன்னார் அரிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு கடந்த வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு விழாவிற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்ட வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களிடம், பாடசாலை சமூகம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும் மாணவர்களை விளையாட்டிலும் ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கோடும், அமைச்சர் அவர்கள் தனது 2016ஆம் ஆண்டுக்கான பிராமண அடிப்படையிலான நன்கொடை (CBG ) நிதியில் இருந்து ரூபாய் 1,25,000 நிதியை ஒதுக்கி, குறித்த பாடசாலையில் உதைபந்தாட்ட கோல் கம்பங்களும், வலைப்பந்தாட்ட கம்பங்களும் அமைக்கப்பட்டுள்ளது, குறித்த திட்டங்கள் நிறைவுற்றுள்ள நிலையில் அதற்கான காசோலையை பாடசாலையின் அதிபரிடம் 15-12-2016 வியாழன் மாலை 2:30 மணியளவில் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் வைத்து அமைச்சர் வழங்கிவைத்தார்.

Related posts

World Islamic Conference President mythreepala Sirisena participated

wpengine

ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக சி.ஐ.டியினர் சற்றுமுன் அவரது இல்லத்தை சுற்றிவளைத்துள்ளனர்.

wpengine

அஷ்ரப் மரணத்தின் புலனாய்வு அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு பஷீர் விண்ணப்பம்

wpengine