அரச வெசாக் வைபவத்திற்காக 3420 லட்ச ரூபா செலவு!

அரச செவாக் வைபவத்திற்காக இம்முறை 3420 லட்ச ரூபா செலவிடப்பட உள்ளதாக வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டம் வீரகெட்டிய நய்கல ரஜமஹா விஹாரையை மையமாகக் கொண்டு அரச வெசாக் விழா நடைபெறவுள்ளது.

இந்தப் பகுதியில் சமய சமூக மேம்பாட்டுக்காக இந்தப் பணம் செலவிடப்பட உள்ளதாக அமைச்சர் ஊடகமொன்றுக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சீரற்ற காலநிலையினால் வீடுகளை இழந்த அனைவருக்கும் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச வெசாக் வாரம் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares