பெண் அரச ஊழியர் மீது பாலியல் தொல்லை! இன்னும் ஒருவர் கைது

களுத்துறை முதல் அளுத்கம வரை பொதுப் போக்குவரத்து பேருந்தில் பயணித்த ஒரு அரச அதிகாரியான பெண் ஒருவர் பாலியல் கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அளுத்கம பொலிஸார் இளைஞர் ஒருவரை கைது செய்து களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.


கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 49 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து, சந்தேகநபர் நேற்று மாலை அளுத்கம பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 24 வயதான கித்துல்கல பகுதியை சேர்ந்தவர் எனவும், அவர் பானந்துறையில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேற்று வேலை முடிந்து வீடு திரும்பும் போது கொழும்பிலிருந்து அளுத்கம செல்லும் வழியில் சந்தேகநபர் பல முறை குறித்த பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்துள்ளார்.


இதனையடுத்து, பாதிக்கப்பட்ட குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்போது அளுத்கம பேருந்து நிலையத்தில் கடமையில் இருந்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares