அரச சேவையில் 40வருடங்கள் சேவையாற்றி ஒய்வுபெறும் மாத்தளை அப்துல் றசாக்

(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை நகரை பிறப்பிடமாகவும் காத்தான்குடி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செய்யிது அஹமது அப்துல் றசாக் இலங்கை அரச சேவையில் 40 வருட காலம் சிறப்பாக பணியாற்றி இன்றுடன்  17-05-2016 ஒய்வு பெறவுள்ளார்.

1956-05-18 மாத்தளையில் பிறந்த இவர் அரச சேவையில் முதன் முதலாக 1976-10-10 திகதியில் இருந்து 14 வருடங்கள் காத்தான்குடி பட்டினாச்சி மன்றத்தில் சேவை செய்தார்.

இவருக்கான நியமனத்தை சிறந்த சமூக சேவையாளரும்,சிறந்த அரசியல் செயற்பாட்டாளருமான மர்ஹூம் அஷ்ஷஹீட் அஹமட் லெவ்வை ஹாஜியார் வழங்கி வைத்தார்.

அதன் பின்னர் 1991ம் ஆண்டு தொடக்கம் இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி மின் அத்தியட்சகர் பணிமனையில் உத்தியோகத்தராக வேலை செய்துவரும் இவர் இன்று          17-05-2016 திகதி ஒய்வு பெறவுள்ளார்.
40 வருடங்கள் மிகச் சிறப்பாக கடமையாற்றி ஒய்வு பெறுகின்ற உத்தியோகத்தர் அப்துல் றசாகுக்கு காத்தான்குடி இலங்கை மின்சார சபை பணிமனையின் மின் அத்தியட்சகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

செய்யிது அஹமது மற்றும் ஓஜீதும்மா தம்பதிகளின் புதல்வாரன இவர் காத்தான்குடி பட்டினாச்சி மன்றத்தில் 14 வருடமும் இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி மின் அத்தியட்சகர் பணிமனையில் 26 வருடமுமாக மொத்தம் 40 வருடம் இலங்கை அரச சேவையில் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares