பிரதான செய்திகள்

அரச ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியும்.

அரச மற்றும் தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் காலம் மேலும் நீடிக்கப்பட்டள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சற்று முன்னர் அறிவித்துள்ளது.


நாளை (திங்கட்கிழமை) முதல் வெள்ளிக்கிழமை வரை அரச மற்றும் தனியார் துறையை சேர்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்யும் காலம் மீண்டும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த வாரமும் வீட்டில் இருந்து பணி செய்யும் காலமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது.


இலங்கையின் சில பகுதிகளில் கொரோனா வைரஸின் பரவல் தீவிரமிக்க பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்படவுள்ளது.


அதிக ஆபத்தான பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கு தற்போது அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவிப்பு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஏனைய பகுதிகளுக்கு நாளை காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்; நாட்டின் பல பகுதிகளில் மே தின நிகழ்வுகள்!

Editor

மன்னார் பிரதேச சபை தவிசாளரின் கவனத்திற்கு! பிரதேச சபை நடவடிக்கை எடுக்குமா

wpengine

ஆணொருவர் புர்கா அணிந்து சென்ற சம்பவத்தால் பதற்றம்

wpengine