அரச ஊழியர்கள், ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும்.

இலங்கையில் அரச ஊழியர்கள் தொடர்பில் அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி அமைப்புகள் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவிக்கும் காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து இந்த அறிவிப்பு வெளியாகியள்ளது.

அதன்படி, அரசியல் கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்கள் மற்றும் பிற கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பொதுச் சொத்துகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அத்துடன் வாக்குப்பதிவு நடைபெறும் மாவட்டங்களில் அரச ஊழியர்கள், ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பினை அமைச்சகங்களின் செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் தலைமையிலான அனைத்து அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares