அரச ஊழியர்களுக்கு குறைந்த வட்டியில் வீட்டுக்கடன்: சஜித் பிரேமதாச

காணிகள் இல்லாத அரச ஊழியர்களுக்கு காணிகளை வழங்கி, வீடு ஒன்றை கட்டிக்கொள்ள குறைந்த வட்டியில் கடனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் 04/03/2016 ஆம் திகதி  நடைபெற்ற பிரதேச இணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். 12798895_10153640332680186_2569681870583711870_n

இந்த கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ச மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகிய இணை தலைவர்களின் தலைமையில் நடைபெற்றது.

அரச ஊழியர்கள் காணிகளை கோரும் போது செல்லா காசாக்கப்பட்டனர். இந்த நிலைமையை போக்க காணி இல்லாத அரச ஊழியர்களுக்கு காணிகளை வழங்கி, வீடுகளை கட்டிக்கொள்வதற்காக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஊடாக 4 வீத வட்டியில் வீடமைப்பு கடன் பெற்றுக்கொடுக்கப்படும்.12802697_10153640333405186_6003897358445749347_n

இதன் மூலம் அரச ஊழியர்களின் கனவு நனவாகும். அம்பாந்தோட்டை பிரதேசத்தில் காணிகளை வழங்கும் போது, காணி இருப்பவர்களுக்கு மிகப் பெரிய காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

தகுதி அடிப்படையின்றி, பல்வேறு தொடர்புகள் மற்றும் அதிகாரத்தை பயன்படுத்தி காணிகள் வழங்கப்பட்டுள்ளன. இனிமேல் அப்படியான முறையில் காணிகளை அதிகாரிகள் வழங்கக் கூடாது என அமைச்சர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares