பிரதான செய்திகள்

அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.


குறித்த சம்பள உயர்வு ஜூலை மாதத்திலிருந்து உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கென 2700 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், எதிர்வரும் ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 107 வீதத்தால் அதிகரிக்கும் எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு என்பவற்றுக்கு 1000 பில்லியன் ரூபாவிற்கும் அதிகத் தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொக்கெயின் பொலிசாரிடம் ஒப்படைப்பு சதொச நிறுவனத் தலைவர்

wpengine

வன்னி சமூர்த்தி உத்தியோகத்தர் உடனான சந்திப்பு எஸ்.பீ.திஸாநாயக்க

wpengine

இனவாதத்தை ஒழிக்க! றிஷாட்டின் கரத்தை பலப்படுத்த அரசியல்வாதிகள் முன்வர வேண்டும்.

wpengine