அரச ஊழியர்களுக்காக குரல் கொடுக்கும் ஊழல் எதிர்ப்பு முன்னணி

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கான சம்பள முற்பணத்தை வழங்க நிதியை பெற்றுக்கொடுக்குமாறு ஊழல் எதிர்ப்பு முன்னணி உட்பட சில சிவில் அமைப்புகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

அரச திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவன ஊழியர்களுக்கு புத்தாண்டுக்கான சம்பள முற்பணத்தை வழங்க தேவையான நிதியை வழங்குமாறு நிதியமைச்சு, திறைசேரி உட்பட பொறுப்புக் கூற வேண்டிய நிறுவனங்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

ஊழல், மோசடிகள் காரணமாக நட்டத்தில் இயங்கும் பல நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு சம்பள முற்பணத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பாரிய நட்டம், கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைமை, வீண் விரயம் மற்றும் ஊழல் போன்ற காரணமாக அரச நிறுவனங்கள் இந்த நிலைமைக்கு உள்ளாகியுள்ளன.

இப்படியான சில நிறுவனங்களுக்கு சம்பளத்தை வழங்க மாத்திரம் திறைசேரி மாதாந்தம் நிதியை வழங்கி வருகிறது. எனினும், புத்தாண்டு கொடுப்பனவுகளை வழங்க இந்த நிறுவனங்களிடம் போதிய நிதி வசதிகள் இல்லை.

இதன் காரணமாக இலங்கையின் மிகப் பெரிய கலாச்சார பண்டிகையின் போது அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் பெரும் பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர் எனவும் ஊழல் எதிர்ப்பு முன்னணி குறிப்பிட்டுள்ளது.

 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares