பிரதான செய்திகள்

அரசுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்னால் பொதுமக்கள் இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக விழிப்புணர்வுக்கான மக்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

இதன்போது, நிறுத்து நிறுத்து விலையேற்றத்தை நிறுத்து, அரிசி தேங்காய்க்கு விலையேற்றம் பியருக்கோ விலை குறைப்பு, குடிக்க கொடுத்து குடி கெடுக்கும் அரசாங்கம், எரிபொருள்களின் விலையேற்றத்தை மீளப்பெறு போன்ற கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடப்படுகின்றது.

Related posts

செல்பி மோகத்தால் 126 ஆண்டு கால சிலையை உடைத்த இளைஞர்!

wpengine

மட்டக்களப்பு மாவட்ட செயலக ஊழல்! லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

wpengine

மின்னல் ரங்காவுடன் சேர்ந்து ”வளர்த்த கடா மார்பில் மீண்டும் பாய்கின்றது.

wpengine