அரசியல் மரணம் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி உணர வேண்டும்.

பிரிவினைவாதம், அடிப்படைவாதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மோசடி, ஏமாற்று நடவடிக்கைகளை ஆதாரமாக கொண்ட அரசியல் அமைப்புகளுக்கு இம்முறை தேர்தலில் மக்கள் சிறந்த பாடத்தை கற்பித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் பிரச்சார செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸ்ஸமில் தெரிவித்துள்ளார்.


கொழும்பு – கோட்டையில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.


இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

1977ஆம் ஆண்டுக்கு பின்னர் ரணில் விக்ரமசிங்க இல்லாத நாடாளுமன்றம் உருவாகியுள்ளது.


நிதி, சர்வதேச பலம் என எது இருந்தாலும் மீன், தண்ணீர் போன்று அரசியலுக்கு மக்கள் இல்லாமல் போனால் கிடைப்பது அரசியல் மரணம் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி தற்போதாவது உணர வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த 55 லட்சம் மக்களின் 28 லட்சம் மக்களே சஜித் பிரேமதாச ஆரம்பித்த ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர்.


ஒன்பது மாத காலத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சஜித் பிரேமதாசவை கைவிட்டு சென்றுள்ளனர்.


மாகாணசபைத் தேர்தல் போன்ற எதிர்காலத்தில் நடக்கும் தேர்தல்களில் இதனை விட அதிகமானவர்கள் சஜித்தை விட்டு செல்வார்கள் எனவும் முஸ்ஸமில் குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares