பிரதான செய்திகள்

அரசின் கடன் ஒருவருடத்தில் 8.3வீத அதிகரிப்பு

அரசின் மொத்தக் கடன் தொகை கடந்த ஒரு வருடத்தில் 8.3 சதவீதமாக அதிகரித்திருப்பதாக இலங்கை வங்கி அறிவித்துள்ளது.

 

இலங்கையின் கடன் தொகை, கடந்த ஜூன் முப்பதாம் திகதியன்று ரூ.10,163.9 பில்லியனாக இருந்ததாகவும், 2016ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இருந்த கடன் தொகை ரூ.9,387.3 பில்லியனாக இருந்ததாகவும் இலங்கை வங்கி சுட்டிக் காட்டியுள்ளது.

இதேவேளை, இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை இரு மடங்காக உயர்ந்திருப்பதாகவும், அதன்படி, எதிர்வரும் 2019ஆம் ஆண்டளவில் இலங்கை திருப்பிச் செலுத்தவேண்டிய கடன் தொகை ரூ.645.1 பில்லியனாக இருக்கும் என்றும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘மூடி’ என்ற உலக நாடுகளின் கடன் அளவீட்டு முகவரகம் தெரிவித்துள்ளது.

Related posts

ராஜபக்ஷ படை குறைப்பு அடிப்படை உரிமை மனு விசாரணை மார்ச் 19 ஆம் திகதி.!

Maash

சஜித் விலகல்! டளஸ்சுக்கு ஆதரவு

wpengine

2 வருடங்கள் கடந்த புதிய கடவுச்சீட்டுக்கான 26,000 இற்கும் மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் விண்ணப்பங்கள்.

Maash