அரசாங்கம் வெளிப்படைத்தன்மை இன்றி செயற்படுகின்றது! இப்படி சென்றால், நாட்டை விற்று விடுவார்கள்

நிலைமை இப்படியே சென்றால், நாட்டை விற்று விடுவார்கள் என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக அஸ்கிரிய மாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஆட்சியாளர்கள் அனைத்திற்கும் முன்னதாக நாடு மற்றும் மக்கள் குறித்தே சிந்திக்க வேண்டும். எதனை செய்ய வேண்டுமானாலும் எமக்கு ஒரு நாடு இருக்க வேண்டும். மக்களுக்கு வாழ்க்கையை கொண்டு நடத்த முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது.

மக்கள் இப்படி கடும் கஷ்டங்களுக்கு உள்ளாகி இருக்கும் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மை இன்றி மேற்கொள்ளும் சில நடவடிக்கைகளை மக்கள் நிராகரித்து வருகின்றனர் எனவும் அஸ்கிரிய மாநாயக்கர் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டோர் நேற்று மாநாயக்க தேரரை சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares