பிரதான செய்திகள்

அரசாங்கம் வழமை போன்று முஸ்லீம்களிற்கு எதிரான உணர்வுகளை தூண்ட ஆரம்பித்துள்ளது

அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகள் அதிகரித்துள்ள வேளையில் முஸ்லீம்களிற்கு எதிரான உணர்வுகளை தூண்டுவதற்காக ரிசாத்பதியுதீன் கைதுசெய்யப்பட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.


நாட்டில் எதிர்ப்பு உருவாக ஆரம்பித்துள்ள போதிலும் அரசாங்கம் வழமை போன்று முஸ்லீம்களிற்கு எதிரான உணர்வுகளை தூண்ட ஆரம்பித்துள்ளது என நளின்பண்டார தெரிவித்துள்ளார்.


அரசாங்கம் ஆட்சிக்குவருவதற்காக பல சாதனங்களை பயன்படுத்த ஆரம்பித்தது என குறிப்பிட்டுள்ள அவர் முஸ்லீம்களிற்கு எதிரான இயக்கம் எதற்காக பயன்படுத்தப்பட்டது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


அதிகாரத்திற்குவருவதற்காக ரிசாத்தை பயன்படுத்தினார்கள்,மருத்துவர் சாபி பெண்களிற்கு கருத்தடை செய்தார் என தெரிவித்து அதனை பயன்படுத்தினார்கள் என நளின்பண்டார தெரிவித்துள்ளார்.

Related posts

நமது சமூகத்தை சூழ்ந்துகொண்டிருக்கும் ஆபத்துக்கள் அமைச்சர் றிசாத்

wpengine

மன்னார் சவேரியார் தேசிய பாடசாலை மாணவன் முதலிடம்

wpengine

மரணித்த ஐந்து முஸ்லிம்களின் சடலங்கள் அடக்கம் செய்யப்படவுள்ளது.

wpengine