பிரதான செய்திகள்

அரசாங்கம் மக்களைப் பற்றி கரிசனை கொள்ளவில்லை முஜுப்

அரசாங்கம் மக்களைப் பற்றி கரிசனை கொள்ளவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நேன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,


பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகின்றமையினால் இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தனது நிலைப்பாட்டை மக்களிடம் முன்வைக்க வேண்டும்.


அரசாங்கம் மக்களின் உயிர்களைப் பற்றி கரிசனை கொள்ளாது மே மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக தேர்தலை நடாத்த முயற்சித்து வருகின்றது.


இது ஓர் பாரதூரமான ஓர் நிலைமயாகும், தேர்தல் ஆணைக்கு அரசாங்க்தின் அரசியல் நோக்கங்களில் கூட்டு சேரக் கூடாது.


மக்களுக்காக தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை உடனடியாக வெளிப்படுத்த வேண்டுமென முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Related posts

நாளை 10வது உதான கம்மான ”தயாபுர” மக்களிடம்

wpengine

ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படலாம் பைசல் முஸ்தபா

wpengine

கருணா புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை

wpengine