பிரதான செய்திகள்

அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை அறிவித்து பார்க்கட்டும்

அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை அறிவித்தால் நாங்கள் எமது வேட்பாளரை அறிவிப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வேட்பாளரை தெரிவுசெய்வது எமக்கு பெரிய விடயமல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்தும் பேசிய அவர், “ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் வேட்பாளர் தொடர்பாகவுமே பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த விடயத்தில் நாங்கள் அலட்டிக்கொள்ளமாட்டோம்.
ஏன் என்றால் எமது எதிர்பார்ப்பாக இருப்பது மாகாணசபை தேர்தலாகும்.

அதற்கான முயற்சியிலேயே நாங்கள் இருக்கின்றோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாசகார சக்திகளை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துங்கள் சாகலவிடம் அமைச்சர் றிஷாட்

wpengine

வடமாகாண பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கான கூட்டம் யாழ்

wpengine

மன்னார் நகர சபையின் 2020ஆம் ஆண்டிற்கான வரவு

wpengine