பிரதான செய்திகள்

அரசாங்கத்திற்கு பொதுத் தேர்தலில் எந்த வகையிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியாது

நாட்டின் தேர்தல் வரலாற்றுக்கு அமைய தற்போதை அரசாங்கத்திற்கு பொதுத் தேர்தலில் எந்த வகையிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.


காலி மாபலகம பிரதேசத்தில் நடைபெற்ற சமய நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


தேர்தல் வரலாற்றை எடுத்துக்கொண்ட எந்த கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியாது.


ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைத்தால், அந்த கட்சி 125 ஆசனங்களை கைப்பற்ற முடியும். எதிர்க்கட்சிகளுக்கு 100 ஆசனங்கள் கிடைக்கும்.


எனினும் அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களின் பின்னர் நடத்தப்படும் பொதுத் தேர்தல்களில் 7 முதல் 8 லட்சம் வாக்குகள் குறைவாகவே கிடைக்கும்.
இது இயற்கையான தீர்மானம். இவ்வாறு சுமார் 10 லட்சம் வாக்குகள் குறையும் போது, எந்த வகையிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற முடியாது.


ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியை அமைத்து அனுபவமுள்ள கட்சி. 2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியுடன் கூட்டணியை ஏற்படுத்தினோம்.
2015ம் ஆண்டு மீண்டும் நாட்டின் சிவில் அமைப்புகள் உள்ளிட்டஅணிகளுடன் இணைந்து கூட்டணியை அமைத்தே, ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடித்தோம்.


இதனால், கூட்டணி அமைப்பதில் அனுபவமுள்ள கட்சி என்ற வகையில் கூட்டணியை அமைக்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
100 வீதம் நாங்கள் தேர்தலுக்கு தயாராக இருக்கின்றோம். கட்சியில் தலைமைத்துவம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை.


ரணில் விக்ரமசிங்க தலைவர் என அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பௌத்தர்களுக்கு எதிராக சதித்திட்டங்கள் இல்லை- ஓமல்பே சோபித தேரர்

wpengine

கட்சி காரியாலயத்தை வவுனியாவில் திறந்து வைத்த விக்னேஸ்வரன்

wpengine

தவிசாளரின் அறிக்கையும் தலைவரின் மௌனமும்

wpengine