பிரதான செய்திகள்

அரசாங்கத்தின் வேலை முஸ்லிம் பெண்களின் ஆடை,திருமண வயதெல்லையை மாற்றுதல்

தற்போதைய அரசாங்கத்தின் வேலை முஸ்லிம் பெண்களின் ஆடை,திருமண வயதெல்லையை மாற்றுதல் மாத்திரமே என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

சட்டவிரோதமாக பல பெண்களுக்கு சிசேரியன் செய்தார், மோசடியான முறையில் பல சொத்துக்களை சேர்த்தார் என பல குற்றச்சாட்டுக்கள் வைத்தியர் ஷாபி மீது வைக்கப்பட்டிருந்தது.

எனினும் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதன் முக்கிய குற்றவாளி குருநாகல் வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளரே ஆவார்.
நீதிமன்றங்கள் குற்றங்களை நிரூபிப்பதற்கு முன்பே விமல் வீரவன்ச, உதய கம்மன்பில,ரதன தேரர் ஆகியோர் தீர்ப்பளித்து விடுகின்றனர். நீதிமன்றத்திற்கு சென்று பொலிஸாரை மிரட்டிய ரதன தேரரை ஏன் இந்த அரசாங்கம் கைது செய்யவில்லை?

இந்த அரசாங்கத்தின் வேலை முஸ்லிம் பெண்களின் ஆடையை மாற்றுவதும், முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லையை மாற்றுவதும்,ஷரியா சட்டத்தை மாற்றுவதுமே ஆகும். அதனை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்.

ஷரியா சட்டத்தில் கைவைக்க எவருக்கும் இடமளிக்க மாட்டோம். ஷரியா சட்டம் யாருக்கும் எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

அரசாங்கம் செய்த நலன்புரிகள் என்ன? : செலவுகள் என்ன?

wpengine

என்னை அரசியலில் இருந்து ஒரங்கட்ட பல முனை அம்புகள்,தொடர் சதிகள்,கொடும்பாவிகள் கூட அமைச்சர் றிஷாட்

wpengine

வவுனியா மாவட்ட புதிய அரசாங்க அதிபர் நியமனம்

wpengine