பிரதான செய்திகள்

அம்பாறை மாவட்ட விவசாய பிரதி பணிப்பாளர் முஸ்லிம் ஒருவர்

(காமிஸ் கலீஸ்)

அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளராக கடமை புரிந்த எம்.எஸ். அபுல் கலீஸ் அவர்கள் அம்பாறை மாவட்டத்துக்கான மாவட்ட விவசாயப் பணிப்பாளராக பதவியுயர்வு பெற்றதனைத் தொடர்ந்து இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

மேற்படி பதவியுயர்வானது அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவின் (Public Service Commission) பதவியுயர்வுடனான நியமனக் கடிதத்தின் பிரகாரமும் விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியின் பெயரிலும் வழங்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட கச்சேரியில் நடைபெற்ற இப் பதவியேற்பு நிகழ்வின்போது ஓய்வுநிலை மாவட்ட விவசாயப் பணிப்பாளரான ஏ.ஆர்.ஏ. லத்தீப் அவர்களும் கலந்துகொண்டார்.

இலங்கை விவசாய சேவை முதலாம் தர அதிகாரியான எம்.எஸ். அபுல் கலீஸ் அவர்கள் இலங்கை விவசாயத் திணைக்களத்தின் மத்திய அரசின் விவசாய விரிவாக சேவையில் இணைந்து 1992 முதல் 2009 வரை உதவி விவசாயப் பணிப்பாளராகவும் 2009 முதல் 2017 வரை பிரதி விவசாயப் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வெற்றிடத்திற்கு தகுதியான அதிகாரியொருவர் நியமிக்கப்ப்படும்வரை தொடர்ச்சியாக இவரே அப் பொறுப்புக்களிலும் கடமையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மாயக்கல்லி மலை புத்தர் சிலை விவகாரம்: குழுவொன்றை அமைக்க கோரிக்கை

wpengine

மறிச்சுக்கட்டி மக்களின் 19வது நாள் போராட்டம்! வீதிக்கு இறங்கிய கொய்யாவாடி மக்கள் (வீடியோ)

wpengine

மாகாண சபை தேர்தலிலும் கலப்பு முறை பைசர் முஸ்தபா

wpengine