பிரதான செய்திகள்

அம்பாரையில் கட்டுப்பணம் செலுத்தியது அமைச்சர் றிஷாட்,ஹசன் கூட்டணி

(ஊடகப்பிரிவு)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, இன்று (11) அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் கட்டுப்பணத்தை செலுத்தியதாக, மக்கள் காங்கிரஸின் அரசியல் விவகாரப் பொறுப்பாளரும், சட்டத்தரணியுமான ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் செயலாளர் எஸ்.சுபைர்தீன், இன்று காலை அம்பாறை மாவட்ட செயலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

அக்கரைப்பற்று மாநகர சபை, அக்கரைப்பற்று பிரதேச சபை, பொத்துவில் பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, காரைதீவு பிரதேச சபை, கல்முனை மாநகர சபை, சம்மாந்துறை பிரதேச சபை, நாவிதன்வெளி பிரதேச சபை ஆகியவற்றில் மக்கள் காங்கிரஸ் தமது கட்டுப்பணத்தை செலுத்தியதாக அவர் தெரிவித்தார்.

அதேபோன்று மட்டக்களப்பு, திருகோணமலை ஆகியவற்றில் சில சபைகளிலும், மக்கள் காங்கிரஸ் போட்டியிடுவதற்காக, இன்று கட்டுப்பணத்தை செலுத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

எரிபொருள் விலை குறைக்கப்பட்டது!

Editor

குருநாகல் மாவட்ட மு.கா முக்கியஸ்தர் மக்கள் காங்கிரஸில் இணைவு!

wpengine

மீண்டும் ராஜிதவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

wpengine