பிரதான செய்திகள்

அம்பலாந்தோட்டையில் அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

அம்பலாந்தோட்டை, கொக்கல்ல பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் 62 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொக்கல்ல பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு வருகை தந்த இனந்தெரியாத மூவர், வீட்டின் ஜன்னலில் இருந்து ஒருவரை தேடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது அந்த வீட்டில் இருந்த சிறுமி ஒருவர் இந்த கும்பலை பார்த்து அலறியதும், அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பேஸ்புக் போன்ற சமூகவலைத்தளம் பாரிய பிரச்சினையாக உள்ளது – ரணில்

wpengine

காலி – கொழும்பு வீதியில் புதிய பஸ் சேவை ஆரம்பம்!

Editor

சாதாரண தரப்பரீட்சையில் முதல் பத்து இடத்தினை தட்டிச் சென்ற மாணவர் விபரம்!

wpengine