பிரதான செய்திகள்

அமைச்சு பதவிகளை அப்படியே தருகிறோம்! விக்னேஸ்வரன் பக்கம் வாங்க

இந்திய அரசியல் மற்றும் தென் பகுதி அரசியல் போன்று என்னிடம் பேசப்படுகின்றது என வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையினை அடுத்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிடடுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

வடமாகாண சபையில் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் 15 பேரும், முதலமைச்சர் தலைமையில் 15 பேரும் தற்போது இருக்கின்றனர். சி.வி.கே.சிவஞானம் தலைமையில் எங்களுடைய தரப்பில் எதிர்க்கட்சியையும் சேர்த்து 21 பேர் இருக்கின்றோம்.

இந்த நிலையில் இன்றைய தினம் சிலர் தொடர்பு கொண்டு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தரப்பிற்கு வருமாறும் கேட்கிறார்கள். குறிப்பாக என்னிடம் தொடர்பு கொண்டு அமைச்சுப்பொறுப்பை அப்படியே வைத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

ஆனாலும், அமைச்சுப் பொறுப்புக்கு ஆசைபட்டு குறித்த செயற்பாட்டில் நான் இறங்கவில்லை. நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதற்காகவே இறங்கியுள்ளேன். அற்ப சொற்ப அமைச்சுப்பதவிக்காக நான் நீதியை கொன்றுவிட்டு வர முடியாது.

நடந்த பிழைகள் என்ன? என்பதினை ஏற்றுக்கொண்டு நகர வேண்டுமே தவிர, இரண்டு பகுதியிலும் மாறி மாறி பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதோ, மாறி மாறி கட்சி தாவுவதோ தீர்வு அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கட்சி மாறுபவர்கள், கட்சி ஒழுக்கத்தை மீறுபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாது.

Maash

மன்னாரில் வீட்டுத்தோட்ட புரட்சி ஆரம்பித்து வைத்த ஸ்ரான்லி டிமெல் -சமுர்த்தி பணிப்பாளர்

wpengine

டக்ஸன் பியூஸ்லஸின் மரணம்! அமைச்சர் G.L.பீரிஸிற்கு அடைக்கலநாதன் கடிதம்

wpengine