பிரதான செய்திகள்

அமைச்சுப் பதவியினை பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை மீளப் பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் முஸ்லிம்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவித்து, முஸ்லிம் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் ராஜாங்க அமைச்சர்கள் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.

பதவியை ராஜினாமா செய்த அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மீளவும் தங்களது பதவிகளை பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி தெரிவித்துள்ளார்.

கபீர் ஹாசீம் மற்றும் ஹாலீம் ஆகியோர் ஏற்கனவே அமைச்சுப் பதவிகளை மீளவும் பொறுப்பேற்றுக்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை மீளப் பொறுப்பேற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசீயும் கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று அனைத்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூடி கலந்தாலோசித்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

‘ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னாலுள்ள சக்திகளை வெளிக்கொணர வேண்டுமென்பதே நிரபராதிச் சமூகங்களின் எதிர்பார்ப்பாகும்’

Editor

எம்மைத் தோற்கடிக்க வேண்டுமென்ற சூழ்ச்சி, இப்போது உக்கிரமாக இடம்பெறுகின்றது- றிஷாட்

wpengine

ஹக்கீம் முஸ்லிம் சமூகத்தையும் சாய்ந்தமருது கல்முனை மக்களையும் 19 வருடமாக ஏமாற்றியது போதும்

wpengine