அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான டீல்களுக்கு இணங்காது-சஜித்

நாட்டை தற்போதைய நிலையில் இருந்து மீட்பதற்காக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சர்வக்கட்சி அரசாங்கம், நாட்டை மீட்டெடுப்பதற்கான ஒன்றிணைந்த வேலைத்திட்டங்களுக்கு இணங்கினாலும், எந்தவொரு நிலையிலும் அமைச்சுப் பதவிகளைப் பெறுவதற்கான டீல்களுக்கு இணங்காது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அதிகாரமளிக்கப்பட்ட பாராளுமன்ற நிறைவேற்றுக் குழுக்களை மீள ஆரம்பிக்க வேண்டும் என்பதே தமது கட்சியின் யோசனை எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஐக்கிய மக்கள் சக்தி எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் பெற்று மக்களின் சுமையை மேலும் அதிகரிக்காது எனவும் தெரிவித்தார். 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares