பிரதான செய்திகள்

அமைச்சர் ஹக்கீம் விசாரணை செய்யப்படலாம்

முஸ்லிம் காங்கிரஸில் இருந்து இடைநிறுத்தப்பட்ட அக்கட்சி மஜ்ஜுலுசுஸ் சூரா தலைவர் கலீல் மௌலவி மற்றும் உலமா காங்கிரஸ் தலைவர் இல்யாஸ் மௌலவி ஆகியோர் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும். அகில இலங்கை ஜம்மியா தலையிட்டு தங்களுக்கு நியாயம் பெற்றுத்தருமாறு முறையிட்டிருந்தனர்.


குறித்த விடயத்தில் ஜம்மியத்துல் உலமா தலையிடாமல் இருக்கும் நிலைப்பாட்டில் உள்ளதாக தகவல்கள் வெளியான போதும் இதற்கு முன்னர் அமைச்சர் ஹக்கீம் தொடர்பான ஒரு முறைப்பட்டுக்காக ஜம்மியத்துல் உலமா அவரை அழைத்து விளக்கம் கோரியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்வரும் வாரம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் அவர்களுக்கும் முறைப்பாட்டாளர்களான கலீல் மௌலவி மற்றும் இல்யாஸ் மௌலவி ஆகியோரை விசாரனைக்கு அழைக்கபடலாம்  என அகில இலங்கை ஜம்மியா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் சென்று கட்சியை நெருக்கடிக்குள்ளாக்க விரும்பவில்லை என்பதற்காகவே தாங்கள் அகில இலங்கை ஜம்மியாவில் முறையிட்டதாக கலீல் மௌலவி மற்றும் இல்யாஸ் மௌலவி தரப்பு கூறி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

எழுக தமிழ் எழுச்சியா? வீழ்ச்சியா?

wpengine

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு!

Editor

வாகன இறக்குமதி தொடர்பில் புதிய நடைமுறை! பயணக்கட்டுப்பாடு தொடர்பில்

wpengine