பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக 315 போலி சிங்கள முகநூல்கள்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை அழித்தொழிக்கும் நோக்கில் இதுவரை 315க்கு அதிகமான போலி சிங்கள இனவாத முகநூல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வில்பத்துவை அடிப்படையாகக் கொண்டதாகவே அந்த முகநூல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த போலி முகநூல்களின் முகப்புப்படமானது வில்பத்து காடு, யானை, அமைச்சர் ரிஷாடின் புகைப்படம், அமைச்சரை இழிவாக வரைந்த புகைப்படம் மற்றுமு; தொப்பி அணிந்த முஸ்லிம்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளன.

315 போலி முகநூல்களிலும் ஒவ்வொரு நிமிடமும் புதிய புதிய பதிவேற்றங்களை பதிவேற்றிய வண்ணமாகவே உள்ளன.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை தூற்றுதல், வில்பத்துவை அழிப்பதாகக் கூறும் இட்டுக் கட்டப்பட்ட கட்டுரைகள், பௌத்த மதத்திற்கு எதிரானவர் ரிஷாட் எனக்காட்டும் புகைப்படங்கள், ‘எப்படி உஷ்னம் – ஐ லவ் யூ பதியுதீன்”; போன்ற வாசகங்களைக் கொண்ட பதாதைதகள் உட்பட இன்னும் பல செயற்பாடுகள் முகநூல்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

இங்கு அதிர்ச்சியான விடயம் என்னவெனில் ‘விடுதலைப்புலிகள் மரத்தை பாதுகாத்தார்கள், முஸ்லிம்கள் மரத்தை அழித்தார்கள்’ போன்ற புலிகளுக்கு ஆதரவான வாசகங்களை இந்த இனவாதிகள் பதிவேற்றியிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது.

சிங்கள , முஸ்லிம் மக்களை புலிகள் கொன்றழித்ததை மறந்து – புலிகள் மரத்தை பாதுகாத்தார்கள் என புலிகளை தூக்கிப்பிடிப்பது பெரும் வியப்புக்குரிய விடயமாகும்.

கடந்த வாரம் 28 சிங்கள நகரங்களில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் வீடியோ தொகுப்புக்களும் மேற்படி முகநூல்களில் பரவலாக பதிவேற்றப்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது.

மேற்படி 315 முகநூல்களில் சிலவற்றை இங்கு தருகின்றோம். இப்பெயர்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 10ற்கு மேற்பட்ட போலி முகநூல்கள் இயங்கி வருகின்றன. அவற்றின் பெயர்கள் பின்வருமாறு:-
Protect wilpattu, Wilpattu, protect Muthurajawela, reality of wilpattu, wilpattu deforestation , save wilpattu, pola வில்பத்துவ சுரகிமு, வில்பத்து ரியலிடீஸ்,

‘ரிஷாட் பதியுதீன் – வில்பத்து’ எனும் பெயர்களிலும் வில்பத்தை அடிப்படையாகக் கொண்ட போலி முக நூல்கள் பல ஆரம்பிக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.

இங்கு ஒரு கவலையான விடயம் என்னவெனில், சிங்கள இனவாதிகள் தான் அநியாயமாக வடக்கு முஸ்லிம் சமூகத்தையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் கொச்சைப்படுத்தி இழிவுபடுத்தி மற்றும் அம்மக்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கின்றார்கள் என்று பார்த்தால், அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராக அரசியல் செய்யும் மாற்று முஸ்லிம் கட்சிகளின் முகநூல் போராளிகளும் வடக்கு முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவது வேதனையளிப்பதாக அமைந்துள்ளது.

வில்பத்து எனும் பெயரை தமிழில் பதிவு செய்தும் மேற்படி முஸ்லிம் அரரசியல் போலி முகநூல் போராளிகள் – முகநூல்களை ஆரம்பித்து ரிஷாட்டை பழிவாங்கும் போர்வையில் தம் இனத்திற்கே பாரிய அநியாயங்களை செய்து வருவதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

கலீமாச் சொன்ன முஸ்லிம்களாகிய நாம் இவ்வாறான சிங்கள மற்றும் இனவாதப் போக்கைக் கொண்ட முகநூல் அநியாயக்காரர்களிடமிருந்து வடக்கு முஸ்லிம்களையும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் பாதுகாக்க ஒன்றுபடுவதோடு, ஆகக்குறைந்தது தமது முகநூல்களில் வடக்கு முஸ்லிம்களிற்கு ஆதரவாக ஒருபதிவையேனும் அல்லது ஒரு புகைப்படத்தையேனும் பதிவேற்றி எமது ஆதரவை ஒன்றுபட்டு வெளிப்படுத்துவோம்.

Related posts

வித்தியா கொலை! மாவை சேனாதிராஜாவிடம் விசாரணை

wpengine

வடக்கையும் கிழக்கையும் ஒரு போதும் இணைக்கக்கூடாது! – கெஹெலிய

wpengine

முசலி அல்லிராணி கோட்டை பகுதியில் கேரள கஞ்சா

wpengine