பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக மாகல்கந்தே சுதந்த தேரர்

நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர், அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்குமாறு மாகல்கந்தே சுதந்த தேரர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியத்தின் அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் ஆகியோருக்கிடையே இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொது சேவையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் சட்டம்! பிரதமர் கருத்து

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திருத்தச்சட்ட வரைபு

wpengine

ஊழியர்களுக்கு EPF வழங்காத 22,450 நிறுவனங்கள் அடையாளம்! – தொழில் அமைச்சு தெரிவிப்பு .

Maash