பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடுகள் எதுவும் இல்லை

தற்சமயம் வெளிநாடு சென்றுள்ள அமைச்சர் றிஷாட் பதியுதீன் அர்ஜுன் மகேந்திரன் போன்று தப்பியோடிவிடக் கூடும் என பெருமளவு பிரச்சாரங்கள் இடம்பெற்று வரும் நிலையில், றிஷாட் பதியுதீன் உத்தியோகபூர்வ விஜயம் நிமித்தமே வெளிநாடு சென்றுள்ளதாக மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிராக முறைப்பாடுகள் எதுவும் இல்லையெனவும் தெரிவிக்கின்ற அவர், பொலிசில் முறைப்பாடு இருப்பின் அமைச்சர் என்பதற்காக அவர் தப்ப முடியாது எனவும் அவரையும் கைது செய்து பொலிசார் விசாரணை நடாத்துவர் எனவும் அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தான் அரச உயர் மட்டத்திற்கு அறிவித்து விட்டே வெளிநாடு சென்றதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் அரசியல் பழிவாங்கும் இடமாற்றம்

wpengine

விஜயகலாவுக்கு என்ன தண்டனை என்பதை நாம் அவதானித்துக்கொண்டே இருக்கின்றோம்.

wpengine

அல்லாஹ் மீண்டும் பிறப்பார்”  ஞானசார தேரர் கூறுகிறார்-முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine