பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட் எம்மை சந்தித்த போது எந்த நேரத்திலும் பதவி விலக தயார் என கூறினார்

அமைச்சர் ரிசாட் பதியூதீன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தால், அது தொடர்பாக அவர் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.


கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் றிசார்ட் பதியூதீனுக்கு எதிராக எந்த குற்றச்சாட்டாவது சுமத்தப்பட்டிருக்குமாயின் அவர் தீர்மானம் ஒன்றை எடுக் வேண்டும் என்றே நான் நினைக்கின்றேன்.

அவர் எம்மை சந்தித்த போது எந்த நேரத்திலும் பதவி விலக தயார் எனக் கூறினார். எவரும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரும் அவசியமில்லை. அவர் பதவி விலக தயாராகவே இருக்கின்றார்.

எதிர்க்கட்சிக்கு தேவையான வகையில் ஒவ்வொருவருக்கு உதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்து அமைச்சர்களை நீக்க நாங்கள் சந்தர்ப்பம் வழங்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

“புலிப் பயங்கரவாதத்தை அழித்த மாபெரும் தலைவனே எங்களுடைய தலைவர் மஹிந்த

wpengine

றிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

wpengine

இத்தாலி வரலாற்றில் பெண் முதல் நகர முதல்வர்

wpengine