பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டை பேஸ்புக்கில் விமர்சனம் செய்ய! ஊடக மாபியாக்களை கூட்டிசெல்லும் ஹக்கீம்

(ஹபீல் எம். சுஹைர்)

சில நாட்கள் முன்பு ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசெனாவுடன் அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் றிஷாத் ஆகியோர் கட்டாருக்கு பயணம் செய்திருந்தனர். இதில் அமைச்சர் ஹக்கீம் தன்னோடு ஒரு மீடியா கும்பலையே அழைத்துச் சென்றிருந்தார். ஆனால், அமைச்சர் றிஷாதோ தன்னோடு யாரையும் அழைத்துச் சென்றிருக்கவில்லை. அமைச்சர் ஹக்கீம் அழைத்துச் சென்றவர்கள் முக நூல்களில் அமைச்சர் றிஷாதை மிகவும் கீழ் தரமான வார்த்தைகள் கொண்டு விமர்சிப்பவர்கள்.

சில மாதங்கள் முன்பு அமைச்சர் ஹக்கீம் இப்படியானவர்களை அழைத்துக்கொண்டு நுவரெலியாவுக்கு சுற்றுலா அழைத்து சென்றிருந்தார். தற்போது கட்டாருக்கு அழைத்து சென்றுள்ளார். அடுத்த முறை அமைச்சர் றிஷாதை விமர்சிப்பவர்களை அவர் விண்ணுலகம் அழைத்துச் சென்றாலும் அழைத்துச் செல்வார். அந்த நிலையிலேயே அமைச்சர் ஹக்கீம் உள்ளார். இதிலிருந்து ஊடக மாபியாவை வைத்துள்ளவர் யார் என்பதை மிகவும் வெளிப்படையாக அறிந்துகொள்ளலாம்.

அமைச்சர் ஹக்கீம் என்ன செய்தாவது தனது ஊடகத்தை கட்டி எழுப்புவதில் மிகவும் அக்கறை கொண்டுள்ளார். இருந்த போதிலும் தொடர்ந்தும் அவரது ஊடகம் மந்தகதியிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றது. மலடியால் பிள்ளை பெற முடியாது என்பதை அமைச்சர் ஹக்கேம் அறிந்துகொள்ள வேண்டும். அமைச்சர் ஹக்கீம் கீழ் தரமான விமர்சனங்கள் செய்வோரை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை நிறுத்தி அவர்களுக்கு சிறந்த கருத்தியல் ரீதியான வாதங்களை முன் வைக்க தெளிவூட்ட வேண்டும்.

Related posts

தைபா அரபுக் கல்லூரிக்கு புதிய மாணவிகளை சேர்க்க நேர்முகப் பரீட்சை

wpengine

25 இளவரசிகள், 100 அதிகாரிகள் சவுதி மன்னரின் சுற்றுப்பயணம்

wpengine

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பட்டதாரிகள் – பொலிஸார் இடையில் மோதல்

wpengine