பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டை சந்தித்த முசலி கூட்டுறவு சங்கம்

முசலி வடக்கு தெற்கு பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிஷாட் பதியுதீனுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றன.

நேற்று மாலை அமைச்சில் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் 2019ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துறையாடப்பட்டுள்ளாதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதன் போது கூட்டுறவு அமைச்சர் என்ற வகையில் பல வேலைத்திட்டங்களுக்கான நிதி வழங்க இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் கடந்த வருடம் மக்களின் வாழ்வாதார தேவையினை கருத்தில் கொண்டு இலகு கடன் அடிப்படையிலும்,அபிவிருத்திக்காகவும் பல லச்சம் ரூபா நிதியினை அமைச்சர் வழங்கி இருந்தார்.

மேலும் முசலி பிரதேசத்தில் கட்டப்பட்ட சுமார் 12க்கும் மேற்பட்ட பழைய கூட்டுறவு கிளையினை திறந்து வைக்க இதுவரைக்கும் முசலி வடக்கு தெற்கு பல நோக்கு சங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கூட்டுறவு சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் பல தடவை கோரிக்கையினையும் விடுத்துள்ளார்கள்.

Related posts

தமிழ் தேசிய கூட்டமைப்பு பட்டம்,பதவிக்காக செயற்பட கூடாது – டெனீஸ்வரன்

wpengine

உயிரிழந்தவர்களுக்காக ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி

wpengine

சமூக வலைத்தளங்கள் மீதான தடை மக்கள் மத்தியில் சந்தேகம் மஹிந்த

wpengine