பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டின் கூட்டத்தை தடுத்து தேர்தல் திணைக்களம்

மட்டக்களப்பு, காத்தான்குடி நகரசபைக்கு போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டம் தேர்தல் அதிகாரிகளினால் இடைநிறுத்தப்பட்டமையின் காரணத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த கூட்டம் அனுமதிக்கப்பட்ட நேரத்தினையும் தாண்டிச்சென்றதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் தேர்தல் அதிகாரிகளினால் கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

காத்தான்குடி நகரசபை தேர்தலில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கான பரப்புரை கூட்டமும் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டு வைக்கும் நிகழ்வும் நேற்று இரவு இடம்பெற்றது.

காத்தான்குடி நகரசபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ரி.எல்.ஜவ்பர்கான் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில், அமைச்சர் ரிசாத் பதியுதீன் மற்றும் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர்.

குறித்த நிகழ்வில் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக கூட்டம் நடைபெற்ற நிலையில் அங்கு வந்த தேர்தல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் சுசீலன் கூட்டத்தினை இடைநிறுத்துமாறு பணித்ததை தொடர்ந்து அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டது.

உதவி தேர்தல் ஆணையாளருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் குறித்த கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக அங்கு உரையாற்றிக்கொண்டிருந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தனது உரையினை இடைநடுவில் நிறுத்திவிட்டுச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

வற் வரி அதிகரிப்பிற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் ஆர்பாட்டம்

wpengine

யானை சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னத்தை பயன்படுத்துவது சிக்கல் இல்லை ரணில்

wpengine

பா.உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளில் அறிக்கைகளை வெளியிட முடிவு!

Editor