பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்டின் ஏற்பாட்டில் பாணந்துறையில் பாடசாலை உபகரணங்கள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாணந்துறை, பள்ளிமுல்லை கிளையின் ஏற்பாட்டில் 200 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும் நிகழ்வு அண்மையில் பள்ளிமுல்லையில் வட்டார அமைப்பாளர் ரிஸ்வி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்களின் பாராளுமன்ற விவகாரத்தில் செயலாளர் A.R.M. ஜிப்ரி கலந்து கொண்டார்.

பாணந்துறை வடக்கு பொலிஸ் ஔநிலையப் பொறுப்பதிகாரி பரணவிதான , இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் வர்த்தக மேம்பாட்டு உத்தியோகத்தர் ஸாஹிர் அன்சாரி ஆகியோர்
விசேட அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.

அமைச்சர் கௌரவ ரிஷாட் பதியுதீன் அவர்களின் ஏற்பாட்டில் வழங்கப்பட்ட அன்பளிபுகளுக்காக இப்பிரதேச மக்கள் அமைச்சர் அவர்களுக்கு தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்கள்.

Related posts

வடக்கு, கிழக்கில் 20,000 உளவாளிகள் நடமாடுகின்றார்கள் சேனாதிராஜா

wpengine

வவுனியா மாவட்ட விவசாய திணைக்களத்தின் கற்றாளையில் ஊழல் மோசடி

wpengine

பதவி நீக்கம்! மஹிந்த தலைமையில் விரைவில் கூடி தீரமானம் எடுப்போம்-ரம்புக்வெல்ல

wpengine