பிரதான செய்திகள்

அமைச்சர் றிஷாட்,சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக பொதுபலசேனா முறைபாடு

அமைச்சர் றிஷாட் பதியுதீன் வடமாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம், உள்ளிட்டவர்க்ளுக்கு எதிராக பொதுபலசேனா அமைப்பினர் நேற்று பொலிஸ் தலைமையகத்தில் முறைபாடு செய்தனர்.

வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தினால் இனவாத பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டின் ஜனாதிபதி உள்ளிட்டவர்களை கூட சிவாஜிலிங்கம் வடக்கிற்கு வருவதற்க அனுமதி வழங்குவதில்லை என்றும் பொதுபலசேனா  முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அமைச்சர் ரிசாட் பதியூதீன் காட்டினை அழித்து முஸ்லிம் வலயத்தை உருவாக்கி இனவாதியாக செயற்படுவதாகவும் பொதுபலசேனாவின் முறைபாடு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு நகர சபையின் முன்னாள் தலைவர் அசாத் சாலி மற்றும் அமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் பொதுபலசேனாவின் தலைவர் ஞானசார தேரரை கொல்வதற்கு சதிதிட்டம் தீட்டிவருவதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாகவும் பொதுபலசேனாவின் இன்றைய முறைபாடு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அதாவுல்லாஹ், சாபிஸ் மோதல் உச்சகட்டம் அடைந்துள்ளது

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீனின் அவசர வேண்டுகோள்.!

wpengine

வாழைச்சேனையில் பதற்றம்! பின்னனி யோகேஸ்வரனின் நிதி

wpengine