பிரதான செய்திகள்

அமைச்சர் சமலின் திணைக்களத்தை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி

குடிவரவு, குடியகல்வு திணைக்கள செயற்பாடு விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் ஜனாதிபதியின் கீழுள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.


ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியூடாக இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கீழ் இருந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் செயற்பட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய அந்த திணைக்களம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.


அதற்கமைய குடிவரவு குடியகல்வு நடவடிக்கை மற்றும் இலங்கை குடிமகன்களுக்கான நடவடிக்கை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக விசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

12வது நாள் கவனயீர்ப்பு போராட்டம்! ஆதரவு வழங்கிய சிலாவத்துறை ஆட்டோ சங்கம் (படம்)

wpengine

கிளிநொச்சியில் 15 மில்லியன் பெறுமதியான கஞ்சாவுடன் 29 வயது நபர் கைது .

Maash

மன்னாரில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு

wpengine