பிரதான செய்திகள்

அமைச்சரவை மாற்றம் வர்த்தகமானி அறிவித்தல்

இவ்வார இறுதியில் அமைச்சரவை மாற்றம் மற்றும் அமைச்சுக்களுக்கான விடயதானங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த முதலாம் திகதி அமைச்சரவை மறுசீரமைக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை ஒவ்வொரு அமைச்சுக்குமான விடயதானங்கள், அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்கள் என்பன தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகவில்லை.

இதன் காரணமாக அமைச்சுகளின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வார இறுதியில் வெளியிடப்படும் என்றும் ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

Related posts

சமுக சேவைப் பணியில் இணைந்து கொள்ள அழைப்பு

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் எவ்வித பிரச்சினையும் இல்லை – சந்திரிக்கா

wpengine

இரண்டாவது தொகுதி வாகனங்கள் நாட்டை வந்தடைந்தது..!

Maash