பிரதான செய்திகள்

அமைச்சரவை மாற்றம் தாழ்த்தப்படும்

அமைச்சரவை மாற்றம் காலம் தாழ்த்தப்படும் என ஜனாதிபதி செயலக சிரேஸ்ட அதிகாரியொருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் இதுவரையில் எந்தவித இணக்கப்பாட்டையும் ஏற்படுத்திக் கொள்ளாத காரணத்தினால் அமைச்சரவை மாற்றம் காலம் தாழ்த்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 10ஆம் திகதி அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, முழு அளவில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் என ஜனாதிபதி நேற்றைய தினம் ஊடகப் பிரதானிகளிடம் தெரிவித்திருந்தார்.

அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றை நியமிக்க உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானபூர்வமான அடிப்படையில் அமைச்சுக்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Related posts

மோட்டார் வாகன இலக்கத் தகடுகளை இணையத்தளத்தில் பார்வையிடலாம்

wpengine

இறைச்சி வாங்குவோரின் கவனத்திற்கு

wpengine

அத்துமீறும் வடமாகாண அரசியல் இனவாதிகள்: சாடுகிறார் விமல்

wpengine