அமைச்சரவை நியமனம்! நாமல் பெறும் ஏமாற்றம்! ரணில் வெளிநாட்டு பயணம்

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் 37 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த வார இறுதியில் பிரித்தானியா செல்லவுள்ளார். அதன் பிறகு ஜனாதிபதி திட்டமிட்டிருந்த ஜப்பான் பயணத்தை முன்னெடுக்கவுள்ளார்.

மேலும், 22வது அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளும் அதே நேரத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் காரணமாக புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் அமைச்சரவை நியமனத்தில் ஏற்பட்ட தாமதம் அவர்களுக்கு பெரும் ஏமாற்றம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares