அமைச்சரவையில் சண்டை! தேர்தலுக்கு அவசரப்படும் பொதுஜன பெரமுன

அமைச்சரவைக்குள் ஏற்பட்டுள்ள மோதல்கள் காரணமாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தலை நடத்த அவசரப்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான பந்துலால பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்களிடம் நேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,
தேர்தல் பைத்தியம் ஏற்பட்டு, தேர்தல், மூன்றில் இரண்டு எனக் கூறிக்கொண்டிருக்காமல் தயது செய்து கமத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து, அவர்களுக்கு கைகொடுங்கள்.


உரத்தை இலவசமாக அல்ல பணத்தை பெற்றுக்கொண்டாவது வழங்குங்கள் என நாங்கள் கோர விரும்புகிறோம்.
மக்கள் மீதுள்ள அன்பு காரணமாக இவர்கள் தேர்தலை நடத்த முயற்சிக்கவில்லை.


அமைச்சரவைக்குள் இவர்கள் மோதிக்கொள்கின்றனர். நேரடியாக சண்டையிட்டுக் கொள்ளாவிட்டாலும் மறைமுகமாக விமர்சிப்பதை எம்மால் காண முடிகின்றது எனவும் பந்துலால் பண்டாரிகொட குறிப்பிட்டுள்ளார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares