பிரதான செய்திகள்

அமைச்சரவைக் கூட்டத்தின் நேரத்தை மீண்டும் மாற்றுவதற்கு ஜனாதிபதி

வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் நேரத்தை மீண்டும் மாற்றுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த இரண்டு வாரங்களாக காலை 7.30க்கு அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது.

எனினும் அமைச்சர்கள் அந்த நேரத்துக்கு கூட்டத்திற்கு வருவதில் சிரமத்தை எதிர்நோக்குவதால், இனி வரும் நாட்களில் காலை 8.30க்கு அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 50 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது.

இதுதொடர்பான யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்வைத்திருந்தார்.

ஏற்கனவே முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட யோசனை தொடர்பான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதுடன், தமது அமைச்சின் ஊடாக இந்த நிதியை வழங்குவதற்கு அமைச்சர் நவீன் திஸாநாயக்க எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில் நேற்று பிரதமர் ரணில் மாற்று பிரேரணை ஒன்றை முன்வைத்து நிறைவேற்றியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

இந்த யோசனை அடிப்படையில் கடந்த ஏப்ரல்1ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்துடன், இந்த 50 ரூபாய் கொடுப்பனவும் இணைக்கப்படவுள்ளது.

Related posts

தேர்தல் தொடர்பில் 1,490 முறைப்பாடுகள் பதிவு.

Maash

யாழ். ஆளுநர் வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் பணிப்பாளரிடம் கேட்டறிந்து கொண்டார்.

Maash

20ம் சீர் திருத்தம்! கும்புடுதலை நியாயப்படுத்திய போராளிகளுக்கு இது எம் மாத்திரம்?

wpengine