அமெரிக்க ஜனாதிபதி கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா கியூபாவிற்கான வரலாற்று விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மூன்று மணிநேர பயணத்தின் பின்னர் வொஷிங்டனில் இருந்து ஹவான விமானநிலையத்தை அவர் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனதிபதியுடன் சட்டவல்லுனர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கொண்ட குழுவொன்றும் ஹவான சென்றுள்ளது.

88 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்க ஜனதிபதி ஒருவர் கியூபா சென்றுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பரக் ஒபாமா மற்றும் ராகுல் காஸ்ட்ரோவுக்கிடையில் இரு நாடுகளுக்கிடையிலான உறவை புதுப்பிக்கும் நோக்கில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதையடுத்து ஒபாமாவின் கியூப விஜயம் தொடர்பில் தீர்மாணிக்கப்பட்டிருந்தது.

இன்றைய தினம் கியுப ஜனாதிபதி ராகுல் காஸ்ரோவுடன் இருதரப்பு சந்திப்பை மேற்கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி இரு நாடுகளுக்கும் இடையில் மிகவும் வலுவான கடல் மற்றும் தரை வழி உறவுகளை பேனுவது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

எனினும் இந்த விஜயத்தின் போது கியூப புரட்சி தலைவர் Fidel Castro வுடன் அமெரிக்க ஜனாதிபதி சந்திப்புக்களை மேற்கொள்ள மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சிலநட்களில் ஒபாமாவின் கியூப விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த 200 மேற்பட்டோர் அந்நாட்டு பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares